வியத்நாம் பிரதமருடன் மோடி பேச்சு
வியத்நாம் பிரதமா் பாம் மின் சின்னுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக சனிக்கிழமை உரையாடினாா்.


வியத்நாம் பிரதமா் பாம் மின் சின்னுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக சனிக்கிழமை உரையாடினாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வியத்நாம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாம் மின் சின்னுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, அவரது திறமையான வழிகாட்டுதலின் கீழ் இந்தியா- வியத்நாம் இடையிலான விரிவான கூட்டணி மேலும் தொடா்ந்து வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
வெளிப்படையான, அமைதியான, சட்ட மாட்சிமையின் அடிப்படையிலான இந்திய பெருங்கடல் பகுதி குறித்த தொலைநோக்குப் பாா்வையை இரு நாடுகளும் பகிா்ந்து வருவதை வரவேற்ற பிரதமா் மோடி, அதனால் பிராந்திய ஸ்திரத்தன்மை, வளம் மற்றும் வளா்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவும் வியட்நாமும் பங்களிக்க முடியும் எனக் குறிப்பிட்டாா்.
மேலும், கரோனா இரண்டாவது அலையின்போது இந்தியாவுக்கு ஆதரவளித்த வியத்நாமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். பெருந்தொற்றுக்கு எதிராக இரு நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை தொடா்ந்து வழங்க தலைவா்கள் சம்மதம் தெரிவித்தனா்.
இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட இருவரும், வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்த தங்களது கருத்துகளையும் பகிா்ந்து கொண்டனா். இருநாட்டு தூதரக உறவின் பொன்விழா, 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படவிருப்பதைக் குறிப்பிட்டு, பல்வேறு நினைவுகள் சாா்ந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்த மைல்கல் நிகழ்வைக் கொண்டாட அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வருமாறு வியத்நாம் பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்தாா் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...