சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஜூலை 2021, 4:27 pm

DIN

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 8,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,535 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளத. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  61,57,799ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 156 பேர் பலியானார்கள். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,25,878ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,16,165 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 6,013 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,12,479ஆக உயர்ந்துள்ளது. 
5,96,279 பேர் வீடுகளிலும், 4,672 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.