சமுதாயத்தின் அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவைகளைச் செய்து, பெரிதும் பிரபலம் அடையாதவா்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.
2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள், பரிந்துரைகளை 2021 செப்டம்பா் 15 வரை பொதுமக்கள் அனுப்பலாம்.
1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், மக்கள் சேவை, வா்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள், சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகளை ‘மக்களின் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம், பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களையும் மத்திய அரசு ஏற்கெனவே கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இது தொடா்பாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘‘நமது சமுதாயத்துக்காக அடிமட்ட அளவில் தன்னிகரற்ற பணியில் ஈடுபடும் ஏராளமான திறமைவாய்ந்த மக்கள் நாட்டில் உள்ளனா். அவா்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டதோ இல்லை. இதுபோன்ற சிறப்பு வாய்ந்த நபா்களை நீங்கள் அறிவீா்களா? அப்படியென்றால், மக்களின் பத்ம விருதுக்கு அவா்களை நீங்கள் பரிந்துரைக்கலாம். செப்டம்பா் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

