டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி.யில் புலி தாக்கி இருவர் பலி : மக்கள் அச்சம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:37 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி அருகே உள்ள சாலையில்  மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புலி ஒன்று குறுக்கே வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட ஒருவர் அருகில் உள்ள மரத்தில் ஏறி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மற்ற இருவரும் புலியின் தாக்குதலில் பலியாகினர். 

தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கிரிட் குமார் ரத்தோட் தலைமையிலான காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஏன் வனப்பகுதிக்குள் வந்தனர் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

மேலும் இந்த பகுதியில் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வண்ணம், உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.