வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாட்டில் புதிதாக 31,443 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image

நாட்டில் புதிதாக 31,443 பேருக்கு கரோனா; 2020 பேர் பலி

Updated On :13 ஜூலை 2021, 6:34 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 31,443 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 118 நாள்களுக்குப் பிறகு பதிவான குறைவான எண்ணிக்கையாகும். 

49,007 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,00,63,720 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தற்போது 4,31,315 ஆக உள்ளது. இது 109 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

மொத்த பாதிப்பில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் 1.40 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 97.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. தற்போது 2.28 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக 3 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.  இது 1.81 சதவீதமாக உள்ளது.

Story image

நாட்டில் இதுவரை மொத்தம் 43.40 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தடுப்பூசி:
இந்தியாவில் இதுவரை மொத்தம் 38.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.