உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் புதிய மக்கள் தொகை மசோதா அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிய மக்கள் தொகைக் கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜூலை 19 வரை அம்மாநில மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா உத்தரப் பிரதேச மாநில சட்ட இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி, கர்நாடகாவிலும் புதிய மக்கள் தொகை கொள்கை அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரப் பிரதேசம், அசாமைத் தொடர்ந்து கர்நாடாகவும் , புதிய மக்கள் தொகைக் கொள்கையை அமல்படுத்தப்படவுள்ளது.
குறைவான இயற்கை வளங்களே உள்ள நிலையில், அவற்றைக்கொண்டு வருங்காலங்களில் மக்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினம்'' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (திங்கட்கிழமை) முழுமையான விவாதங்களுக்கு பிறகு புதிய மக்கள் தொகை மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
பாஜக ஆளும் மாநிலமான அசாமிலும் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும், இரண்டு குழந்தைகள் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


