வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு மீண்டும் கரோனா

இந்தியாவின் முதல் கரோனா நோயாளி மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜூலை 2021, 10:05 am

DIN

இந்தியாவின் முதல் கரோனா நோயாளி மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா வைரஸ் தாக்குவது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் கரோனா நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் கரோனா ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 30ஆம் தேதி, சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய அவருக்கு கரோனா தொற்று இருந்தது.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவியான அவருக்கு ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "தில்லி செல்வதற்கு முன்பு கரோனா பரிசோதனை  மேற்கொண்டேன்.

ஆன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்றும் ஆர்டி பிசிஆர் சோதனையில் தொற்று உறுதி என்றும் வந்துள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. தற்போது, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்" என்றார்.

இதுகுறித்து திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் ரீனா கூறுகையில், "கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளத.  எனவே, அச்சப்பட தேவை இல்லை. இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. இதுவும் அதுபோல இருக்கலாம். நாங்கள் அவரை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்" என்றார்.

இன்னும், மாணவிக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.