ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவின் சீரம் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி தயாரிக்கும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருவதால் அதனை தீர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷிய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் ஓராண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம். தொழில்நுட்பத்தை பரிமாறி கொள்ளும் முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அதன் ஒரு அங்கமாக, செல் மற்றும் வெக்டர் மாதிரிகளை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசியை தயாரிப்பதற்காக ரஷிய நேரடி முதலீட்டு நிதி நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி என கூறியுள்ள சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா, அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


