பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் (கோப்புப் படம்)
பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் (கோப்புப் படம்)

நாடாளுமன்றம் முற்றுகை: தில்லி செல்ல விவசாயிகளுக்கு இலவச பயணச்சீட்டு

ஜூலை 22-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கப்படும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வாயிலில் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு இலவச பயணச் சீட்டு வழங்கப்படும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து தில்லியில் ராகேஷ் திகைத் செய்தியாளர்களிடம் இன்று (ஜூலை 14) கூறியதாவது, 

நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி செல்ல விவசாயிகளுக்கு இலவசமாக பயணச் சீட்டு வழங்கப்படும்.

பேருந்து மூலம் நாளொன்றுக்கு 200 பேர் தில்லி நாடாளுமன்றம் உள்ள பகுதிக்கு அனுப்பப்படவுள்ளனர். அதற்கான பயணச் செலவை சங்கமே ஏற்கும். 

நாடாளுமன்றத்திற்கு எதிரில் அமைதியான வழியில் போராட்டம் நடைபெறும். அது குறித்து இன்று மேலும் சில விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம் என்று கூறினார். 

ஜூலை 19-ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com