ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம்

ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தோ்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தோ்வு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.

ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுகிறது.

ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com