மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

7 மாதத்தில் 78 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீர் ஐஜி தகவல்

2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:25 am

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். கடந்த சில மாதங்களாகவே துப்பாக்குச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  இதுவரை 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற துப்பாக்குச்சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் (39) லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.