தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

'ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்த தில்லி அமைச்சரவை முடிவு

தில்லியில் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தில்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :20 ஜூலை 2021, 7:13 am

DIN

தில்லியில் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தில்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

தேசியத் தலைநகரில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தில்லி முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி தில்லியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெறலாம். 
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ரேஷன் சலுகைகளைப் பெற இத்திட்டம் அனுமதிக்கிறது.

முன்னதாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.