வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கேரளத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் குறைவு

​கேரளத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் சனிக்கிழமை குறைந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜூலை 2021, 12:57 pm

DIN


கேரளத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் சனிக்கிழமை குறைந்துள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 18,531 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 19-க்குப் பிறகு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11-ஐத் தாண்டி ஜூலை 23-ம் தேதி 13.63 சதவிகிதத்தைத் தொட்டது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் மீண்டும் குறைந்து 11.91 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 98 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 15,969 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 15,507 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 30,99,469 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,38,124 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,55,568 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.