எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர் செல்லும் குடியரசுத் தலைவர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்.

News image
ஜம்மு-காஷ்மீர் செல்லும் குடியரசுத் தலைவர்
Updated On :24 ஜூலை 2021, 10:52 am

DIN

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜூலை 25ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

22ஆவது கார்கில் வீரர்கள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்த உள்ளார்.  மேலும் லடாக்கில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.