கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிறுமியை அசால்ட்டாக காப்பாற்றிய காவலர்..திக் திக் நிமிடங்கள்

பரிதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சிறுமியை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

News image
சிறுமியை காப்பாற்றும் காவலர்
Updated On :25 ஜூலை 2021, 10:51 am

DIN

பரிதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சிறுமியை காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

ஹிரியாணா மாநிலம் பரிதாபாத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ரயில் நிலையத்தில் 28ஆவது செக்டார் பகுதியின் பக்க சுவற்றின் மீது ஏறி கீழே விழப்போவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்களும் அவரிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பியுள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்ட காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டுள்ளார்.

பக்கச் சுவற்றின் ஒரத்தில் உள்ள பகுதியில் கடந்து சென்று அச்சிறுமியை இழுத்துள்ளார். நொடிப்பொழுதில் மற்றொருவர் மேலிருந்து இறங்கி காவலருடன் சேர்ந்து அச்சிறுமியை தூக்கி காப்பாற்றினார்கள். இதுகுறித்த விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சிறுமியை காப்பாற்றிய காவலர் சர்பராஸூக்கு காவல் ஆணையர் ஒபி சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிங் கூறுகையில், "வாழ்க்கையே போராட்டம்தான். சிரமங்களிலிருந்து ஓடக்கூடாது. இம்மாதிரியான விலை மதிப்பற்ற வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்" என்றார்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு குடும்பத்தாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.