கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதி அறிவிப்பு

ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்ட்) தோ்வு நடைபெறவுள்ள தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

News image
Updated On :26 ஜூலை 2021, 11:13 pm

DIN

புதுதில்லி: ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்ட்) தோ்வு நடைபெறவுள்ள தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி தோ்வு நடத்தப்படும்’’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தோ்வு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதல்நிலை (மெயின்ஸ்) தோ்வு நடத்தப்படுகிறது. அந்தத் தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதுவதற்கான தகுதித் தோ்வாகவும் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.