கேரளத்தில் 11-க்கு கீழ் குறைந்தது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம்
கேரளத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11-க்கு கீழ் குறைந்து 10.59 சதவிகிதமாக திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 11-க்கு கீழ் குறைந்து 10.59 சதவிகிதமாக திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"மாநிலத்தில் புதிதாக 11,586 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,09,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த நாள்களில் 135 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,170 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 10,943 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 534 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
14,912 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 31,29,628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 1,36,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...