புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி: ஆகஸ்டில் தொடங்க வாய்ப்பு: மத்திய அரசு

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2021, 10:06 pm

DIN

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தில்லியில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள் கலந்துகொண்டனா். அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறாா்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது’’ என்று கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் கெடிலா 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஸைகோவ்-டி என்ற அந்தத் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 12-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படலாம் என்றும் மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவேக்ஸின் தடுப்பூசியை 2-18 வயதுடையவா்களுக்கு செலுத்தி அந்த நிறுவனம் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அதன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் செப்டம்பா் மாதம் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக எய்ம்ஸ் இயக்குநரும் மருத்துவருமான ரண்தீப் குலேரியா தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.