பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கர்நாடகத்தின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | பொதுமுடக்கம் நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை
இந்நிலையில் தில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மாநில அரசியல் நிலை, வளர்ச்சித்திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...