வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நாட்டில் கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்பு

நாட்டில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி  வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி

Updated On :30 ஜூலை 2021, 12:18 pm

DIN

நாட்டில் இதுவரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி  வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவலை எழுத்துப் பூர்வமாக மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

“நாட்டில் ஏப்ரல் 2020 முதல் மே 2021 வரை கரோனாவால் பெற்றோரை இழந்த 645 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 158, ஆந்திரத்தில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், பிரதமரின் நிவாரண நிதியின் கீழ் அவர்களது கல்விச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.