சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆந்திரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :30 ஜூலை 2021, 1:32 pm

DIN

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வழக்கம்போல் இவர்கள் நேற்றிரவு இறால் பண்ணை உள்ள குளம் அருகே தூங்கியுள்ளனர்.

ஆனால் இன்று காலை அவர்கள் அனைவரும் எரிந்த நிலையில் இறந்துகிடந்தனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

6 பேரும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்பு குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 6 புலம்பெயர் தொழிலாளர்கள் ஆந்திரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.