ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெற கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஜப்பானின் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சைதமா, கனகவா, சிபா, ஒசாகா ஆகிய நகரங்களில் ஆகஸ்ட் 2 முதல் 31ஆம் தேதி வரை அவசரநிலை கடைபிடிக்கப்படும் என பிரதமர் சுகா அறிவித்துள்ளார்.
"டோக்கியோ மற்றும் மேற்கு பெருநகரப் பகுதிகளில் நாம் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய வேகத்தில் நோய்த்தொற்றுகள் பரவி வருகின்றன" என்று தெரிவித்த பிரதமர் சுகா, “இதேவேகத்தில் கரோனா பரவல் அதிகரித்தால் ஜப்பானின் மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
மேலும் டோக்கியோவைச் சுற்றியுள்ள ஹொக்கைடோ, கியோட்டோ, ஹியோகோன் டி ஃபுகுயோகா உள்ளிட்ட 5 நகரங்களிலும் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. டோக்கியோவில் வியாழக்கிழமை ஒருநாள் நிலவரப்படி புதிதாக 3,865 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


