தில்லியில் புதிதாக 58 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் புதிதாக 58 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,265 ஆக உயர்ந்துள்ளது.
70,355 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 58 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 56 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்று பலியாகியுள்ளார்.
இதுவரை மொத்தம் 14,10,631 பேர் குணமடைந்துள்ளனர். 25,053 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 581 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, தில்லியில் இதுவரை மொத்தம் 1 கோடிக்கும் சற்று கூடுதலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...