’மாட்டிறைச்சியை அதிகம் உண்ணுங்கள்’: மேகாலய பாஜக அமைச்சர்

மக்கள் மற்ற அசைவ உணவுகளைக் காட்டிலும் மாட்டிறைச்சியை அதிகம் உண்ணலாம் என மேகாலய பாஜக தலைவர் சான்போர் சுல்லாய் தெரிவித்துள்ளார்.
’மாட்டிறைச்சியை அதிகம் உண்ணுங்கள்’: மேகாலய பாஜக தலைவர்
’மாட்டிறைச்சியை அதிகம் உண்ணுங்கள்’: மேகாலய பாஜக தலைவர்

கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் போன்றவற்றைவிட மாட்டிறைச்சியை அதிகம் உண்ணுங்கள் என மேகாலய பாஜக  அரசில் அமைச்சராகவுள்ள சான்போர் ஷுல்லாய் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாட்டிறைச்சியை உண்பவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடந்துவரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உணவு சுதந்திரத்தில் தலையிடுவதாக விமர்சனம் எழுந்து வந்தது.

இந்த நிலையில் மேகாலய மாநில பாஜக தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான சான்போர் ஷுல்லாய் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் துறை அமைச்சராகப் பதவியேற்ற ஷுல்லாய், ஒரு ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்புவதைச் சாப்பிட எந்தத் தடையுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

"கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் மீனைக் காட்டிலும் மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம் மாடுகள் வதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்தும் நீங்கும்” என ஷுல்லாய் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமின் புதிய கால்நடைச் சட்டம் காரணமாக, மேகாலயாவுக்குக்  கால்நடைகள் கொண்டுவரப்படுவது பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அஸ்ஸாம் முதல்வரும் தாம் பேசவிருப்பதாகவும் சான்போர் ஷுல்லாய் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com