
நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 46 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 46 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தது. இன்று காலை 8 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 54,94,423 முகாம்களில் 46,15,18,479 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 52,99,036 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,07,81,263 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,291 பேர் குணமடைந்தனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து 34 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,920 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 17,76,315 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 46,64,27,038 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.42 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 54 நாள்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.