புணே அருகே மே மாதத்தில் மட்டும் 9,928 குழந்தைகளுக்கு கரோனா
புணே அருகேவுள்ள அகமது நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


புணே அருகேவுள்ள அகமது நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏராளமான சிறார்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அகமது நகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவானோர் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் மட்டும் குழந்தைகள், மாணவர்கள் என 9,928 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக அளவிலான குழந்தைகள் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 7,760 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் தொற்று பாதிப்பு விகிதத்திற்கு ஏற்ப உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகவில்லை என்று அம்மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...