வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

'கரோனா விகிதம் 5% ஆகக் குறையும் வரை கர்நாடகத்தில் தளர்வு வேண்டாம்'

கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News image
'கரோனா விகிதம் 5% ஆகக் குறையும் வரை கர்நாடகத்தில் தளர்வு வேண்டாம்'
Updated On :1 ஜூன் 2021, 8:37 am

DIN


பெங்களூரு: கர்நாடகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5% ஆக எட்டும்வரை தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகும், மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்றும், மாநிலத்தில் ஒரு நாள் கரோனா பாதப்பு 5 ஆயிரத்துக்கும் குறைவாகவும், கரோனா உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் மாறும்வரை மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் குழுவினர், ஞாயிறன்று கூடி ஆலோசனை நடத்தி, தங்களது பரிந்துரைகளை திங்களன்று அளித்தனர். இது குறித்து முதல்வர் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசன நடத்தி முடிவுகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.