தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவிலேயே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டு நாள்கள் தாமதமாக கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் இயல்பான அளவில் மழை பெய்யும். வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இயல்பைவிட குறைவான அளவில் பருவமழை பெய்யும்.
அதுபோல மத்திய இந்திய பகுதிகளில் இயல்பான அளவை விட அதிகமாகவே மழைப் பொழிவு இருக்கும். மானாவாரி விவசாயம் செய்யக் கூடிய பகுதிகளில் இயல்பு அல்லது இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


