கரோனாவால் பெற்றோரை இழந்த மகள்களுக்குத் தொற்று: அரசு உதவ கோரிக்கை
ராஜஸ்தானில் கரோனாவால் பெற்றோரை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு மகள்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ராஜஸ்தானில் கரோனாவால் பெற்றோரை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு மகள்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவுக்கு எதிரான பணியில் பெற்றோரை இழந்த தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று இரு மகள்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர்களான இருவர் கரோனாவுக்கு எதிரான பணியின்போது உயிரிழந்தனர். அவர்களது இரு மகள்கள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கரோனா முன்களப் பணியின்போது பெற்றோரை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ வேண்டும். எங்களது பெற்றோர் இறப்பிற்கு காரணம் கரோனா தான் என்று சான்றிதழில் மருத்துவமனை பதிவு செய்ய தவறிவிட்டது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து தவித்து வரும் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...