மகாராஷ்டிரத்தில் புதிதாக 15 ஆயிரம் பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,169 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 57,76,184 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 29,270 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 54,60,589 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 94.54 சதவிகிதம்.
மகாராஷ்டிரத்தில் 285 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 1.67 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் இன்னும் 2,16,016 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...