மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'உங்கள் குரலால் மத்திய அரசை எழுப்புங்கள்' - இலவச தடுப்பூசி குறித்து ராகுல் கோரிக்கை!

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க  மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :2 ஜூன் 2021, 7:05 am

DIN

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க  மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையைவிட பன்மடங்கு பாதிப்பு, பன்மடங்கு உயிரிழப்புகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அந்தவகையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். 

இதனிடையே, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனாவுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக அவர் மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி மட்டுமே கரோனா தொற்றுநோய்க்கு எதிரான வலுவான பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க மக்களாகிய அனைவரும் நீங்கள் குரல் எழுப்பி மத்திய அரசை எழுப்புங்கள்! என்று கூறியுள்ளார். 

இதற்காக #SpeakUpForFreeUniversalVaccination என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவிடுமாறு கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.