பிகார் மாநிலம் பாட்னாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனை தொடங்கியுள்ளது.
பாட்னாவின் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசி மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்வதற்காக கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11-ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய நீதி ஆயோக் மருத்துவக் குழு உறுப்பினர் வி.கே.பால், 2 முதல் 18 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு கோவேக்ஸின் தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளதாகக் கூறினார்.
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக் -வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


