ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் கிடைக்கும்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்றும் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூன் 2021, 11:14 am

DIN

இந்தியாவில் பைசர் தடுப்பூசி விரைவில் வரவுள்ளது என்றும் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா தெரிவித்துள்ளார். 

நாட்டில் சொந்தத் தயாரிப்பான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் தொடக்கம் முதலே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தொடர்ந்து ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வந்துள்ளது. 

இதையடுத்து தடுப்பூசிகள் குறித்து பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் கலிரியா, வெளிநாட்டைச் சேர்ந்த பல தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வரவுள்ளன. அதில் குறிப்பாக பைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பெறப்பட உள்ளது. 

இவ்விரண்டு தடுப்பூசிகளும் பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும். இதனால் மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். 

மேலும் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் ஜூலை - அக்டோபர் காலகட்டத்தில் 5 லட்சம் டோஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக நாட்டில்பெரும்பாலானோர்  தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.