வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா புகைப்படம்

மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

News image
மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா புகைப்படம்
Updated On :5 ஜூன் 2021, 12:39 pm

PTI


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசே சொந்த நிதியைக் கொண்டு தடுப்பூசிகளை வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் நிலையில், தற்போது வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.