தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் மீண்டும் தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை

தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

News image
தில்லியில் மீண்டும் தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை
Updated On :7 ஜூன் 2021, 6:07 am

DIN

தில்லியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் தில்லியில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 400க்கும் குறைவானோருக்கே கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனிடையே தில்லியில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக தில்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் 50 சதவிகித பயணிகளுடன் மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.