ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தடுப்பூசிக்கான தட்டுப்பாடு விரைவில் தீரும்: பிரதமர் மோடி

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 ஜூன் 2021, 12:40 pm

DIN


கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியது:

"மற்ற நாடுகள் போல இந்தியாவும் கடினமான சூழலில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் நமக்குப் பிரியமான ஏராளமானோரை இழந்துள்ளோம்.

100 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரிய தொற்று பாதிப்பு இது.

படிக்க: மாநிலங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி: பிரதமர் மோடி

ஏப்ரல், மே மாதங்களிலிருந்து ஆக்ஸிஜன் தேவை கடுமையாக அதிகரித்தது. ஆக்ஸிஜனைக் கொண்டு வர விமானம், ரயில் என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் எந்த மூலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் அது நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆக்ஸிஜன் உற்பத்தியும் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. 

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தேவை ஏற்பட்டதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளோம். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி இல்லையென்றால் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கரோனா தடுப்பூசி உற்பத்தியில் எந்த நாட்டைக் காட்டிலும் நாம் பின்தங்கிய நிலையில் இல்லை. நம் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். 

தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியது.

வரும் நாள்களில் தடுப்பூசிகள் விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும் 3 தடுப்பூசிகள் இறுதிக் கட்ட நிலையில் உள்ளன. அவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன. 

தடுப்பூசியாக அல்லாமல் பதில் மூக்கின் வழி மருந்தை உட்கொள்ளும் வகையில் தடுப்பு மருந்து வரவுள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு விரைவில் தீரும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.