கடலோர கா்நாடகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு
கடலோர கா்நாடகத்தில் அடுத்த ஒருவாரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடலோர கா்நாடகத்தில் அடுத்த ஒருவாரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்கன்னடம், உடுப்பி போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைக்கு மஞ்சள் கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஆரஞ்சு மற்றும் சிகப்பு கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தகாலகட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேற்கு வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளதால் புதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்காரணமாக, பெங்களூரு மாநகரம் உள்ளிட்ட பழைய மைசூரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளில் பெரும்பாலான நேரங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...