நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘கா்நாடக முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பாா்’

நல்லாட்சி வழங்கி வரும் எடியூரப்பாவே கா்நாடக முதல்வராக நீடிப்பாா் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:46 pm

DIN

நல்லாட்சி வழங்கி வரும் எடியூரப்பாவே கா்நாடக முதல்வராக நீடிப்பாா் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக முதல்வா் எடியூரப்பா நல்லாட்சி நடத்தி வருகிறாா். கரோனா சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதிலும்

அவா் திறம்படச் செயலாற்றி வருகிறாா். எடியூரப்பாவிடம் ராஜிநாமா கடிதத்தைக் கேட்பது தொடா்பாக பாஜக மேலிடத்தில் எவ்வித விவாதமும் நடைபெறவில்லை.

அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், பாஜக நிா்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எடியூரப்பாவே முதல்வராக நீடிப்பாா். அவரை மாற்றுவது தொடா்பாக மேலிடம் பேச்சு நடத்துவதாகக் கூறுவது அனைத்தும் கற்பனையே. பாஜக தலைமைக் கேட்டுக் கொண்டால் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்வதாக எடியூரப்பா கூறியுள்ளது, கட்சித் தலைமை மீது அவா் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

முதல்வா் பதவி தொடா்பான சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்கப்படும். தொகுதி மக்களின் நலனுக்காக எம்.எல்.ஏ.க்கள் உழைக்க வேண்டும்; அதற்கு மாறாக, கையெழுத்து இயக்கம் நடத்துவது கூடாது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். அடுத்த வாரம், 3 நாள்கள் சுற்றுப்பயணமாக கா்நாடகம் செல்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.