மகாராஷ்டிரத்தில் மழை: ராய்கட் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ராய்கட் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ராய்காட்: மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ராய்கட் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராய்கட் மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த மசாட்டத்தில் சராசரியாக 58 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாவட்டத்துக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு எச்சரிக்கையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...