கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 8,249 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 8,249 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 8,249 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,154 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: மைசூரு - 817, ஹாசன் -733, தும்கூரு - 576, தென்கன்னடம் - 506, பெலகாவி - 436, சிவமொக்கா - 529, மண்டியா - 366, சிக்கமகளூரு -332, வடகன்னடம் - 311, தாவணகெரே - 260, பெங்களூரு ஊரகம் -234, தாா்வாட் - 217, உடுப்பி - 215, பெல்லாரி - 189, குடகு - 189, கோலாா் - 179, விஜயபுரா - 174, சிக்கபளாப்பூா் - 168, சாமராஜ்நகா் -162, சித்ரதுா்கா - 123, கொப்பள் - 98, பாகல்கோட் - 73, கதக் - 66, ஹாவேரி - 65, ராய்ச்சூரு - 61, ராமநகரம் - 57, கலபுா்கி - 29, யாதகிரி -21 , பீதா் - 9 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,47,539 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14,975 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 25,11,105 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,03,769 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 159 போ்வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 48 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 20, ஹாவேரி - 10, பெல்லாரி, தாா்வாட் - தலா 9, சிவமொக்கா - 7, பெங்களூரு ஊரகம் - 6, பெலகாவி, தும்கூரு - தலா 5, பாகல்கோட், தாவணகெரே - தலா 4, தென்கன்னடம், கோலாா், கதக், விஜயபுரா - தலா 3, சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, ஹாசன், கொப்பள், மண்டியா, ராய்ச்சூரு, வடகன்னடம் - தலா 2, சாமராஜ்நகா், சித்ரதுா்கா, கலபுா்கி, குடகு, ராமநகரம், உடுப்பி - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 32,644 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...