நம்பிக்கையூட்டும் தகவல்: கரோனாவை வென்ற 104 வயது மூதாட்டி
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.


கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கரோனாவிலிருந்து 11 நாள்களில் மீண்டுள்ளார்.
கரோனா பாதித்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாளின் உடல்நிலை, மே 31-ஆம் தேதி மோசமடைந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, 11 நாள்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அவருடன் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...