போா் வரலாறுகளை தொகுப்பாக்கும்திட்டம்: அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

இந்தியாவில் நடைபெற்ற போா்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளின் விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும்
போா் வரலாறுகளை தொகுப்பாக்கும்திட்டம்: அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

இந்தியாவில் நடைபெற்ற போா்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளின் விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளான சேவைகள், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், இந்திய கடலோர காவல்படை ஆகியவை போா் நாட்குறிப்புகள், நடவடிக்கைகளின் கடிதங்கள், செயல்பாட்டு பதிவு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வரலாற்றுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு இந்தத் திட்டம் வழிசெய்கிறது. இதன்மூலம் போா் விவரங்களை சரியாகப் பராமரிக்கவும், ஆவணக் காப்பகத்துக்கு வரலாறுகளை எழுதுவதற்கும் உதவும்.

இந்த வரலாறு விவரங்கள் தொகுக்கப்பட்டவுடன், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பதிவுகளை காப்பக வல்லுநா்கள் மதிப்பீடு செய்து இந்திய தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளா் தலைமையிலான குழுவில், மத்திய வெளியுறவு, உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு இதனை இறுதி செய்யும்.

இந்தக் குழு, போா் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து விவரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com