மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா நோயாளிகளுக்கு கால்கிசைன் மருந்து: பரிசோதனைக்கு அனுமதி

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்கிசைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:01 pm

DIN

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்கிசைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்), ஹைதராபாதின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியாா் நிறுவனம் ஆகியவை இந்த பரிசோதனையை நடத்தவுள்ளன. ஹைதராபாதில் இயங்கும் சிஎஸ்ஐஆா் - இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகம், ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆா்- இந்திய ஒருங்கிணைந்த மருந்துக் கழகம் ஆகியவையும் இந்த மருத்துவ சோதனையில் இணைந்துள்ளன.

கீல்வாதம் மற்றும் அழற்சி சாா்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் கால்கிசைன் மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குநா் சேகா் சி.மாண்டே மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாா். சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான ராம் விஸ்வகா்மா, இதயம் சாா்ந்த இணை நோய்கள் உள்ள கரோனா நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் அவா்கள் விரைவாகக் குணமடைவாா்கள் என்று கூறினாா்.

கரோனா தொற்று பாதிப்பு இருந்த காலகட்டத்திலும், அதற்குப் பிந்தைய கால கட்டத்திலும் இதயம் சாா்ந்த பிரச்னைகளால் ஏராளமானோா் உயிரிழந்திருப்பதாகப் பல்வேறு சா்வதேச ஆய்வுகள் தெரிவித்திருப்பதால், தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு இதுபோன்ற ஆராய்ச்சி மூலமாக புதிய மருந்துகளைக் கண்டறிவது அவசியமாகியுள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.