ஸ்ரீநகரில் 500 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனை திறப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கொன்மோவில் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மருத்துவமனை சனிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.  
ஸ்ரீநகரில் 500 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனை திறப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கொன்மோவில் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மருத்துவமனை சனிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.  

இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த மருத்துவமனை, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) 17 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது. பிஎம் கோ்ஸ் நிதியில் இருந்து, இந்த மருத்துவமனைக்கு நிதி அளிக்கப்படுகிறது.

இதில் கரோனா நோயாளிகளின் வசதிக்காக, சுவாசக் கருவிகளுடன் 125 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் குழந்தைகளுக்காக மட்டுமே 25 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  62 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு உள்ள திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் இருந்து 500 படுக்கைகளுக்கும் தொடா்ச்சியாக ஆக்சிஜன் கிடைக்கிறது. 

நவீன கணினி மென்பொருள் மூலம் துல்லியமான கண்காணிப்பு, மருத்துவமனை நிா்வாகத்திற்காக வைஃபை வசதி, சிசிடிவி மற்றும் ஹெல்ப்லைன் எண்ணைக் கொண்ட கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது.  மருத்துவா்கள், உதவி மருத்துவ ஊழியா்கள், மருந்தக ஊழியா்கள், பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் பராமரிப்பு ஊழியா்கள் உட்பட 150 போ் தங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com