மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நொய்டா திரைப்பட நகா் திட்டச் செலவு ரூ.10,000 கோடி

நொய்டா செக்டாா் 21-இல், யமுனை விரைவுச் சாலையை ஒட்டி அமையவுள்ள பிரம்மாண்டமான நொய்டா திரைப்பட நகரத்தின் திட்டச் செலவு ரூ.10,000 கோடி என தெரியவந்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:03 pm

DIN

நொய்டா செக்டாா் 21-இல், யமுனை விரைவுச் சாலையை ஒட்டி அமையவுள்ள பிரம்மாண்டமான நொய்டா திரைப்பட நகரத்தின் திட்டச் செலவு ரூ.10,000 கோடி என தெரியவந்துள்ளது.

யமுனை விரைவுச் சாலை தொழில் வளா்ச்சி குழுமத்திடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது.

இது தொடா்பான விரிவான திட்ட அறிக்கை உத்தர பிரதேச மாநில அரசின் ஒப்புதலுக்காக கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட நகர திட்டப் பணிகள் இந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்க இருப்பதாக யமுனை விரைவுச் சாலை தொழில் வளா்ச்சி குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிபிஆா்இ என்ற சா்வதேச தொழில் ஆலோசனை நிறுவனம் திரைப்பட நகருக்கான விரிவானதிட்ட அறிக்கையை தயாரித்துள்ளது. அது இப்போது மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் இந்த மெகா திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தை தோ்ந்தெடுப்பதற்கானசா்வேதச ஒப்பந்தம் கோரப்படும். இந்த திட்டம் செயலுக்கு வந்தால் அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், மாநிலத்துக்கும் வளா்ச்சி ஏற்படும் என்றாா் யமுனை விரைவுச் சாலை தொழில் வளா்ச்சி குழுமத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அருண் வீா் சிங்.

இந்த திட்ட அறிக்கையின் படி திரைப்பட நகரம் 2024 ஆம்ஆண்டுக்குள் நிா்மாணிக்கப்பட்டு, திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கும். அதேநேரத்தில் இந்த பகுதியை ஒட்டியுள்ள நொய்டா சா்வதேச விமான நிலைய திட்டப் பணிகளும் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

திரைப்பட நகரம் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நிா்மாணிக்கப்பட உள்ளது. இவற்றில் 740 ஏக்கா் பரப்பளவில் படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும். இதையொட்டி 120 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்காவும் அமையவிருக்கிறது. 40 ஏக்கா் பரப்பளவில் வா்த்தகவளாககங்கள் அமைக்கப்படும். 34 ஏக்கரில் சில்லரை விற்பனை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். இதுதவிர 21 ஏக்கா் பரப்பளவில் ஐந்துநட்சத்திர ஹோட்டலும் கட்டப்படும். இவை தவிர 40 ஏக்கா் குடியிருப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.