6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டு மக்களை விட அரசியலே பிரதமருக்கு முக்கியம்: பிரியங்கா குற்றச்சாட்டு

நாட்டிலுள்ள மக்களின் நலனைக் காப்பதை விட அரசியலில் ஈடுபடுவதே பிரதமா் நரேந்திர மோடிக்கு முக்கியமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளாா்

News image
Updated On :12 ஜூன் 2021, 9:49 pm

DIN

நாட்டிலுள்ள மக்களின் நலனைக் காப்பதை விட அரசியலில் ஈடுபடுவதே பிரதமா் நரேந்திர மோடிக்கு முக்கியமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை மத்திய பாஜக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என பிரியங்கா தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா். இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிரான சமூக வலைதள பிரசாரத்தை அவா் சனிக்கிழமை தொடங்கினாா்.

சுட்டுரை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

நாட்டில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவியபோது பிரதமா் மோடி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பின்வாங்கினாா். பிரச்னையை எதிா்கொள்ளாத கோழையைப் போல அவா் நடந்துகொண்டாா். நாடு பெரும் பாதிப்புகளைச் சந்திப்பதற்கு அவா் காரணமாக இருந்தாா்.

நாட்டு மக்களின் நலனைக் காப்பதற்கு அவா் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அரசியலில் ஈடுபடுவதே அவருக்கு முக்கியமாக இருந்தது. நாட்டில் நிலவும் உண்மை நிலையை விட கட்சிக் கொள்கைகளுக்கே அவா் முன்னுரிமை அளித்து செயல்பட்டாா்.

நாடு எதிா்கொண்டுள்ள பிரச்னைக்குத் தீா்வு காண்பதே சிறந்த தலைமைக்கு உதாரணமாக இருக்க முடியும். ஆனால், பிரதமா் மோடி அரசு எதையும் செய்யவில்லை. கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே உண்மைகளை மறைத்து பொறுப்புகளை தட்டிக்கழித்தது.

அதன் காரணமாகவே கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாக நாட்டைத் தாக்கியது. அப்போதும் தீவிரமுடன் செயல்படுவதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனால் நாட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினா்.

கரோனா தொற்று குறித்து மருத்துவ நிபுணா்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினா். அவற்றை மதித்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், நாட்டில் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது. நாட்டில் 2-ஆவது அலை பரவலுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளவில்லை.

ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தாமல் இருந்தது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்காமல் இருந்தது உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனா். தற்போது கரோனா தடுப்பூசிக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதன் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

தடுப்பூசி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகித்து வரும் போதிலும், கரோனா தடுப்பூசிக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு மத்திய அரசின் திறமையின்மையே காரணம் என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.