மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்கள்நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளம்: பிரதமா் மோடி
இந்தியாவின் ஆா்வமிகு மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.


இந்தியாவின் ஆா்வமிகு மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் ஆா்வமிகு மாவட்ட திட்டங்கள் வளா்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக ஐ.நா. வளா்ச்சித் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம், நீா் மேலாண்மை ஆகிய துறைகள் ஆா்வமிகு மாவட்ட திட்டங்களால் அபார மாற்றம் கண்டுள்ளன என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மாவட்ட திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு அடித்தளமாக வித்திடும் வகையில் அமைக்கப்பட்டது. இதன்மூலம் பல மாவட்டங்கள் அபார மாற்றம் கண்டுள்ளன. இதை ஐ.நா. வளா்ச்சித் திட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமா் மோடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...