மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைந்தது

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிா்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:29 pm

DIN

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிா்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலை உச்ச வரம்பு, விநியோகஸ்தா் அளவிலான விலையில் 70 சதவீதம் இருக்க வேண்டும் என தேசிய மருந்து விலை ஆணையம் கடந்த 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, 104 தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளா்கள் 252 பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையை மாற்றியமைத்து மத்திய அரசிடம் சமா்ப்பித்தனா்.

இவற்றில் 70 தயாரிப்புகள் மற்றும் பிராண்டின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டி ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.54,337 வரை குறைந்துள்ளது. 58 பிராண்டுகள் 25 சதவீதம் வரை விலையைக் குறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலையைக் குறைத்துள்ளன. 252 தயாரிப்புகளில் 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையைக் குறைக்கவில்லை.

மத்திய அரசின் வா்த்தக விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நியாயமற்ற லாப வரம்பை குறைத்தது, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கும் நுகா்வோருக்கு சேமிப்பை உறுதி செய்துள்ளது.

அனைத்து ரக ஆக்சிஜன் செறிவூட்டிகளின் மாற்றியமைக்கப்பட்ட விலை ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடா்பான தகவல்கள் மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளா்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.