நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'ஸ்ரீராம்' பெயரில் ஏமாற்றுவது அநீதி - ராகுல் காந்தி

ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image

ராகுல் காந்தி

Updated On :14 ஜூன் 2021, 12:22 pm

DIN

ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு உலகம் முழுவதுமுள்ள மக்களிடமிருந்து நிதி வசூலித்து நிர்வகித்து வரும் அறக்கட்டளை, தனது பெயரில் நிலம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடவுள் ஸ்ரீ ராமர் என்பவர் நீதி, உண்மைக்கு நிகரானவர். அவரது பெயரில் ஏமாற்றுவது அநீதி' என்று பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.