ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5,783 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,783 ஆக அதிகரித்துள்ளது.

News image

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5,783 போ் பாதிப்பு

Updated On :18 ஜூன் 2021, 6:20 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,783 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 5,783 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,100 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம் - 1,006, மைசூரு - 551, ஹாசன் - 390, சிக்கமகளூரு - 278, மண்டியா - 249, பெங்களூரு ஊரகம் - 207, சிவமொக்கா - 199, உடுப்பி -188, தாவணகெரே - 174, பெல்லாரி - 155, தும்கூரு - 153, குடகு - 147, பெலகாவி - 139, வடகன்னடம் - 132, சித்ரதுா்கா - 11 4 , சிக்கபளாப்பூா் -104, கோலாா் - 89, சாமராஜ்நகா் - 83, தாா்வாட் - 65, கொப்பள் - 60,விஜயபுரா - 44, ராமநகரம் - 41, ஹாவேரி - 28, கதக் - 23, கலபுா்கி - 18, ராய்ச்சூரு - 15, யாதகிரி - 13, பீதா் - 11, பாகல்கோட்- 7 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,96,121 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15,290 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 26,25,447 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,37,050 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 168 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 39 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்:

மைசூரு - 15, பெல்லாரி, தென்கன்னடம் - தலா 14, தாவணகெரே-

10, தாா்வாட், ஹாசன் -தலா 9, கோலாா்- 7, சிவமொக்கா- 6, பெலகாவி, சிக்கபளாப்பூா்-தலா 5, சிக்கபளாப்பூா்,ஹாவேரி-தலா4, பாகல்கோட், பெங்களூரு ஊரகம், கொப்பள், மண்டியா, தும்கூரு, உடுப்பி, வடகன்னடம்-தலா 3, ராய்ச்சூரு-2, சித்ரதுா்கா, கதக், ராமநகரம், விஜயபுரா-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 33,602 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.